கனிமொழியை இந்தியரா என கேட்ட விவகாரம்: விசாரணை செய்ய உத்தரவு
திமுக எம்பி கனிமொழி அவர்கள் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் சிஐஎஸ்எப் அதிகாரி ஒருவர் தன்னை இந்தியரா எனக் கேட்டதாகவும் ஹிந்தி தனக்கு தெரியாததால் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பேசுமாறு கூறியதற்கு அவர் இந்த கேள்வியை கேட்ட தாகவும் இந்தி பேசினால் மட்டும் தான் இந்தியரா என்றும் ஆவேசமாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார்
இதற்கு சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருந்தன. கனிமொழிக்கு நன்றாக இந்தி தெரியும் என்றும் ஏன் அவர் இந்தி தெரியவில்லை என்று கூறினார் என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கனிமொழியின் குற்றச்சாட்டு குறித்து சிஐஎஸ்எப் விசாரணை செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிட்ட மொழியைப் பேச வேண்டும் என்று சிஐஎஸ்எப் கட்டாயப் படுத்துவது கிடையாது என்று சிஐஎஸ்எப் கொள்கையும் அப்படி இல்லை என்றும் கூறிய அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர். கனிமொழியின் டுவிட்டர் பக்கத்திலேயே இதற்கு சிஐஎஸ்எப் பதில் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது