1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 15 பிப்ரவரி 2019 (18:48 IST)

பிடிபட்டது சின்னத்தம்பி யானை! விவசாயிகள் மகிழ்ச்சி

காட்டில் இருந்து ஊருக்குள் வந்த சின்னத்தம்பி யானை, விவசாயிகளின் விளைநிலங்களை சேதப்படுத்தியதால் சின்னத்தம்பி யானையை பிடித்து முகாமுக்குள் அடைக்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
 
இதனையடுத்து மயக்க ஊசி போட்டு சின்னத்தம்பி யானையை பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. முதலில் இந்த முயற்சி தோல்வி அடைந்தாலும் பின்னர் மயக்க ஊசி போட்டும், இரண்டு கும்கி யானை உதவியுடனும் இன்று சின்னத்தம்பி யானை பிடிப்பட்டது. இதனையடுத்து அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
பிடிபட்ட சின்னத்தம்பி யானையை லாரியில் ஏற்றி டாப்சிலிப் பகுதியில் உள்ள முகாமுக்கு கொண்டு செல்ல அனைத்து நடவடிக்கைகளையும் வனத்துறையினர் செய்து வருகின்றனர்
 
இதுகுறித்து அந்தபகுதி விவசாயிகள் கருத்து தெரிவித்தபோது, 'சின்னத்தம்பி யானை கடந்த இரண்டு வாரங்களில் 15 ஏக்கர் கரும்பு, 5 ஏக்கர் வாழை, 5 ஏக்கர் தென்னை போன்றவற்றை சேதப்படுத்தியதாகவும், தற்போது இந்த யானை பிடிபட்டதால் விவசாயிகளான நாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்தனர்.