வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 16 ஆகஸ்ட் 2019 (11:11 IST)

அப்பா செல்போனில்… அம்மா சமையலறையில் – குளியலறையில் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் !

திருவள்ளூர் மாவட்டத்தில் குளியலறையில் இருந்த வாளி தண்ணிர் கீழே கொட்டி ஒன்றரை வயதுக்  குழந்தை மூச்சுத் திணறி இறந்த சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கால் எனும் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் இவருக்கு ஒன்றரை வயதில் அழகான ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் நேற்று முன் தினம் தனது மகனை ஆசையாகக் குளிப்பாட்டுவதற்காக நேற்று குளியலறைக்குச் சென்றுள்ளார் முருகன். அவரது மனைவி அப்போது சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்திருக்கிறார். குழந்தையைக் குளிப்பாட்ட அவர் தயாராகிய போது அவரது அறையில் இருந்த அவரது செல்போன் அடித்துள்ளது. எனவே, அதை எடுக்க தனது ரூமிற்குள் சென்றுள்ளார்.

அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக வாளியில் இருந்த தண்ணீர் கவிழ்ந்து குழந்தை மேல் கொட்டியுள்ளது. இதனால் குழந்தைக்குக் கடுமையாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. முருகன் செல்போன் பேசிவிட்டு வந்து பார்க்கும் போது குழந்தை மூச்சுத்திணறலோடு பரிதாபமான நிலையில் இருந்துள்ளது.

அதைப் பார்த்து பதறிய அவர், குழந்தையை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளது. இந்த சம்பவத்தால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.