1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : செவ்வாய், 17 ஜனவரி 2017 (17:32 IST)

அலங்காநல்லூர் மாணவர்களுக்கு ஆதரவாக களத்தில் குதித்த சென்னை மாணவர்கள்

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான போராட்டம் உச்சகட்ட நிலையை அடைந்துள்ளது. கொட்டும் பனியிலும் உணவு இல்லாமல் மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இன்று காலை போராட்டகாரர்களை கைது செய்யும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.


 

இந்நிலையில் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று சென்னையில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் ஏராளமான மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு தடை நீக்க மறுக்கும் மத்திய அரசை எதிர்த்து கோசங்களை எழுப்பிவருகின்றனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.