வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 16 ஜூலை 2023 (12:46 IST)

சென்னை மெட்ரோவில் அதிக பயணம் செய்தால் பரிசு.. அதிரடி அறிவிப்பு..!

metro rail
சென்னை மெட்ரோ ரயில் அதிக அளவில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பரிசு பொருள் வழங்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை மெட்ரோ ரயில்களில் செல்லும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்த 10 பேருக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பரிசு பொருள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் கட்டமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் என்பவர் 30 பேருக்கு தலா ரூபாய் 2000 என மொத்தம் 60 ஆயிரம் மதிப்புள்ள பரிசுகளை பயணிகளுக்கு வழங்கினார். 
 
இந்த நிகழ்ச்சியில் மெட்ரோ ரயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மார்க் மெட்ரோ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்த பரிசு பொருள்களை வழங்குகின்றன. 
 
ஏப்ரல் மே ஜூன் ஆகிய மாதங்களில் அதிக அளவில் பயணம் செய்த 30 பயணிகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
 
Edited by Siva