வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 31 அக்டோபர் 2021 (08:52 IST)

14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை உள்பட 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனை அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை உள்பட 14 மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் குறிப்பாக தென் மாவட்டங்களான கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
மேலும் புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை முதல் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது 
 
கடந்த 26ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பாக நேற்று இரவு சென்னையில் வெளியே வெளியே நல்ல மழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது