வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 செப்டம்பர் 2018 (08:20 IST)

மணல் கடத்த உதவும் அதிகாரிகள் மீது குண்டாஸ்: சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

தமிழகத்தில் மணல் கொள்ளை என்பது காலங்காலமாக நடந்து வருகிறது. எந்த ஆட்சி வந்தாலும் இதற்கு தீர்வு ஏற்படாததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும் மணல் கடத்தல்காரர்களுக்கு அரசு அதிகாரிகளும், ஆளுங்கட்சி பிரமுகர்களும் உடந்தையாக இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 'மணல் கடத்த உதவும் அரசு அதிகாரிகள் மீது குண்டாஸ் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு சுற்றறிக்கை விடவேண்டும் என்றும், இந்த சுற்றறிக்கை வரும் அக்டோபர் 3ஆம் தேதிக்குள்  அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மணல் கடத்தல் வழக்கில் தமிழக அரசுக்கு இறுதி கெடு விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் துணையின்றி மணல் கடத்த முடியாது என்பதால் இந்த சுற்றறிக்கைக்கு பின் மணல் கடத்தல் கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.