1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 26 ஜூலை 2023 (08:13 IST)

மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை விற்க முடியாது? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

aavin
மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை பாட்டிலில் ஏன் விற்க முடியாது? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
 
ஆவின் பாலை கண்ணாடி பாட்டிலில் விற்பது குறித்து அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில் பால் விநியோகத்தை பாட்டிலுக்கு மாற்ற மக்களிடம் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என ஆவின் சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
 
ஆவின் அறிக்கையால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்து சரமாரியாக கேள்வி எழுப்பியதோடு, புதிய அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
 
மதுபானங்களை பாட்டிலில் விற்கும்போது ஆவின் பாலை பாட்டிலில் விற்க முடியாதா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், மதுபோதையில் பாட்டிலை கையாளும்போது, பொதுமக்களால் கையாள முடியாதா? என்றும் கூறினர். 
 
Edited by Siva