1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (13:27 IST)

போதையில் கார் ஓட்டுபவர்களுடன் செல்லும் நபர்கள் மீதும் வழக்கு தொடரலாம்: சென்னை ஐகோர்ட்

court
போதையில் கார் ஓட்டுபவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் செல்பவர்கள் மீதும் வழக்கு தொடரலாம் என சென்னை ஐகோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை மெரினா கடற்கரை சாலையில் மதுபோதையில் அன்பு சூர்யா என்பவர் ஓட்டிய கார் மோதி 3 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் அவருடன் காரில் பயணம் செய்த பெண் மருத்துவர் ஒருவரை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது
 
ஆனால் இந்த கோரிக்கைக்கு ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருடன் பயணம் செய்பவர்களுக்கும் விபத்தில் சமமான பொறுப்பு உள்ளது என்றும் எனவே மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருடன் பயணம் செய்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.