ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 10 நவம்பர் 2016 (17:55 IST)

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டம் ரத்து - மத்திய அரசு அதிரடி

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் மீத்தேன் திட்டம் ரத்து - மத்திய அரசு அதிரடி

தமிழகத்தின் டெல்டா பகுதிகளில் செயல்படுத்தப்பட இருந்த மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
சமீபத்தில்தான் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்தார். அடுத்த அதிரடி அறிவிப்பாக தற்போது மீத்தேன் திட்டம் ரத்து என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல், எரிவாயு தொடர்பாக ஆய்வு எதுவும் நடத்தப்பட மாட்டாது எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.


 

 
இந்த திட்டத்திற்கு தமிழக அரசு மற்றும் விவசாய சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
 
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்கங்கள் “விவசாயிகளின் வாழ்வாதார விவசாய நிலங்கள் காப்பற்றப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளது.