1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (12:53 IST)

120 அடி கிணற்றில் பாய்ந்த கார்: 3 பேர் சம்பவ இடத்தில் பலி!

கோவையில் கிணற்றில் கார் விழுந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்தில் பலியாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை - சிறுவாணி சாலையில் உள்ள கிளப்பில் நேற்று இரவு ஓணம் பண்டிகை கொண்டாடிவிட்டு காலை வீட்டுக்கு புறப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்னநல்லூர் மாரியம்மன் கோயில் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் 120 அடி ஆழ கிணற்றில் பாய்ந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வடவள்ளி சேர்ந்த பகுதியைச் சேர்ந்த ஆதேஷ், ரவி மற்றும் நந்தனன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.  பலத்த படுகாயம் அடைந்த ரோஷன் என்பவரை காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவரது உடல் வேலை கிணற்றிலிருந்து எடுத்து பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உள்ளனர். மேலும் அந்த வாகனத்தை கயிறு கட்டி மேலே இழுக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.