வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 11 பிப்ரவரி 2019 (21:31 IST)

டெல்லியில் ஜீன்ஸ், கிராமத்தில் சேலையா? பிரியங்கா காந்தியை விமர்சனம் செய்த பாஜக பிரமுகர்!

காங்கிரஸ் கட்சியின் முழு நேர அரசியல்வாதியாக மாறிவிட்ட பிரியங்கா காந்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கணிசமான வெற்றியை பெற்றுத்தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் இன்று ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட மிகப்பிரமாண்டமான பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். இந்த பேரணியின்போது பிரியங்கா காந்தி சேலை அணிந்திருந்தார்
 
இந்த நிலையில் பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி. ஹரீஷ் திவிவேதி இதுகுறித்து கூறியபோது, 'பிரியங்கா காந்தி டெல்லியில் ஜீன்ஸ் மற்றும் டாப் உடையும், கிராமப்புற பகுதிகளுக்கு செல்லுபோது  சேலை கட்டி கொண்டு, பொட்டு வைத்து கொண்டும் செல்கிறார் என கூறினார். மேலும் பாஜகவை பொருத்தவரை ராகுல் காந்தியோ, பிரியங்கா காந்தியோ ஒரு விஷயமே இல்லை என்றும், ராகுலை போல் பிரியங்காவும் விரைவில் தோல்வியை சந்திப்பார் என்றும் கூறினார்.
 
இவரது இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எம். வீரப்ப மொய்லி, மற்றும் மெஹ்பூபா முப்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.