புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 30 செப்டம்பர் 2019 (11:49 IST)

#gobackmodi: டிரெண்டாக்கியவர்களுக்கு நன்றி சொன்ன எச்.ராஜா!!

சென்னை வந்துள்ள மோடிக்கு எதிராக டிவிட்டரில் #gobackmodi என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் எச்.ராஜா. 
 
இன்று சென்னை ஐஐடியில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டுள்ளார். பாஜக கட்சிக்கும் மோடிக்கும் எப்பொழுதும் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் தமிழ்நாட்டு மக்கள் இம்முறையும் டிவிட்டரில் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 
 
ஆம், இன்றும் சென்னை ஐஐடிக்கு வருகை தந்த மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #gobackmodi என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி முதலிடத்தில் உள்ளது. 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, கோ பேக் மோடி என்று மோடி ஜி தமிழகம் வருவதை டிரெண்ட் செய்வதை பெருமிதமாக விளம்பரப்படுத்தியவர்களுக்கு நன்றி... என பதிவிட்டுள்ளார். அதனோடு #TNWelcomesModi என பதிவிட்டுள்ளார். 
 
எச்,ராஜாவின் இந்த பதிவிற்கு கீழ் பலர் #gobackmodi என பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.