கல்லூரி மாணவியை பிளேடால் வெட்டிய ஆட்டோ டிரைவர்: ஒருதலை காதலால் விபரீதம்
பழைய வண்ணாரப்பேட்டை போஜராஜா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் வினோத்குமார் அப்பகுதியை சேர்ந்த கால்லூரி மானவி ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். ஆட்டோ டிரைவர் வினோத்குமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது.
இந்நிலையில் தான் ஒருதலையாக காதலித்து வருவதை அந்த கல்லூரி மாணவியிடம் கூறியுள்ளார். அந்த மாணவி அவரது காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனையடுத்து மாலை கால்லூரி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போது மாணவியை தடுத்த வினோத்குமார் மீண்டும் தனது காதலை கூறியுள்ளார்.
வினோத்குமாரை மாணவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் பிளேடால் மாணவியின் கழுத்தை அறுக்க முயற்சித்துள்ளார். சுதாரித்த மாணவி அவரிடம் இருந்து தப்பித்து விலகி ஓடியுள்ளார்.
ஆனாலும் அவர் பிளேடால் மாணவியை கையில் வெட்டியுள்ளார். இதனால் காயமடைந்த மாணவியை அக்கம்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆட்டோ டிரைவர் வினோத்குமார் தப்பித்து ஓடியுள்ளார்.
வண்ணாரப் பேட்டை காவல் நிலையத்தில் ஆட்டோ டிரைவர் வினோத்குமார் மீது புகார் அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த வினோத்குமாரை காவல்துறை கைது செய்துள்ளது.