செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 14 ஜூன் 2023 (19:38 IST)

அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை தவறுசெய்துவிட்டோம் என்று தற்போது கருதுகிறது - திமுக வழக்கறிஞர்

அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனை அடுத்து அவரை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் திடீரென நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 

அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று வரை ஆரோக்கியமாக இருந்தார் என்றும் இன்று திடீரென அவர் தனக்கு உடல் நல குறைவு என்று கூறி வருகிறார் என்றும் எனவே செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் தரக்கூடாது.

செந்தில் பாலாஜிக்கு ரிமாண்ட் உத்தரவு சரியானது என்றும் இடைக்கால ஜாமின் வழங்கவும் சட்டத்தில் இடை இடமில்லை என்றும் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் கூறினர்.

மேலும் செந்தில் பாலாஜிக்கு உடல்நல குறைவு ஏற்பட்டால் அவருக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை நாங்களே வழங்குவோம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பதற்கான மருத்துவ குழுவை நீதிமன்றமே நியமிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தெரிவித்தனர்.

இந்த வாதத்திற்கு பிறகு செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீதான தீர்ப்பை சென்னை முதன்மை நீதிமன்றம் ஒத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திமுக வழக்கறிஞர் சரவணன் இதுபற்றி கூறியதாவது:

கடந்த 201 ஆம் ஆண்டு நடந்த வழக்கில் திடீரென்று கைது  செய்வதற்கான காரணம் என்ன என்று கேள்வி எழுப்பினோம்.

அமலாக்கத்துறை சார்ப்பில் வைக்கப்பட்ட வாதத்தில் 41 ஏ விதியைக் கடைப்பிடிக்க அவசியமில்லை என்று தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை தவறுசெய்துவிட்டோம் என்று தற்போது கருதுகிறது என்று தெரிவித்துள்ளார்.