ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு எழுதிய முக்கிய கடிதம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை கண்டுபிடிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் ஒன்றை தமிழக அரசு கடந்த ஆண்டு அமைத்தது. இந்த ஆணையம் தற்போது ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிக்கையை அரசுக்கு இந்த ஆணையம் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில், குறிப்பிட்ட சிலரை விசாரணை செய்ய காவல் ஆய்வாளர் தேவைப்படுவதாக ஆறுமுகசாமி ஆணையம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியது.
இந்த கடிதத்தில் குறிப்பிட்டபடி ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக்கு காவல் ஆய்வாளரை நியமிப்பதற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் ஆய்வாளர் நியமனம் குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.