செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 3 ஜூலை 2023 (08:32 IST)

கலை, அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்..! மாணவ மாணவிகள் உற்சாகம்..!

தமிழ்நாட்டில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழகத்தில் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் உள்ள 7,299 இளநிலை படிப்புகளுக்கான சேர்க்கை கடந்த சில மாதங்களாக நடைபெற்றது. 
 
கடந்த மே மாதம் தரவரிசை வெளியிடப்பட்ட நிலையில் மாணவ மாணவிகளின் கலந்தாய்வு இரு கட்டங்களாக நடந்து மாணவ மாணவிகளுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. 
 
இந்த நிலையில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்புகள் தொடங்குகிறது என கல்லூரி கல்வி இயக்குனரகம்  தெரிவித்துள்ளது. 
 
மாணவர்களை வரவேற்க கல்லூரிகளில் சிறப்பு ஏற்பாடு செய்திருப்பதாகவும் ராக்கிங் போன்ற அத்துமீறல்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கல்லூரி கல்வி இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva