சென்னையில் திமுகவின் சட்டத்துறை மாநாடு.. தேதி அறிவிப்பு..!
திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஈவெரா நெடுஞ்சாலை, பச்சையப்பன் கல்லூரியில் எதிரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு ஜனவரி 18ஆம் தேதி நடைபெறும் என்றும், காலை 7:00 மணி முதல் இரவு 7 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இந்த மாநாட்டில் இடம் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் எஸ். ரகுபதி அவர்கள் காலை 8:45 மணிக்கு இந்த மாநாட்டின் கொடியை ஏற்றுவார் என்றும், அதனை தொடர்ந்து , அமைச்சர் துரைமுருகன் இந்த மாநாட்டை தொடங்கி வைப்பார் என்றும், கிரிராஜன் எம்பி முன்னிலை வருகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் கலந்துரையாடல் நடைபெறும் என்றும், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டு பேசுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு கருத்தரங்கு மற்றும் பிரபலங்கள் உரையாடல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என். நேரு, எஸ். ரகுபதி, அந்தியூர் செல்வராஜ், டி. ஆர். பாலு, எம்பி, கனிமொழி எம்பி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். மாநாட்டின் இறுதியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Edited by Mahendran