திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (12:25 IST)

மன்னிப்பும் கேட்க முடியாது, ரூ.100 கோடி நஷ்ட ஈடும் தர முடியாது: டிஆர் பாலுவுக்கு அண்ணாமலை பதில்..!

தமிழக பாஜக தலைவர் தன் மீது அவதூறான குற்றச்சாட்டை சுமத்தியதை அடுத்து 100 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் டி ஆர் பாலு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் 
 
இந்த நிலையில் இந்த நோட்டீஸ்க்கு பதில் அனுப்பி உள்ள அண்ணாமலை ரூ.100 கோடி நஷ்ட ஈடு தர முடியாது என்றும் மன்னிப்பு கேட்க முடியாது என்றும் பதிலளித்து உள்ளார். 
 
இது குறித்து அண்ணாமலையின் வழக்கறிஞர் வெளியிட்டுள்ள நோட்டீஸில் ’டி ஆர் பாலு மீதான சொத்து குவிப்பு வழக்கு குறித்து அண்ணாமலை தெரிவித்த கருத்துக்களில் உறுதியாக உள்ளார். அதனால் அவர் 100 கோடி நஷ்ட ஈடு வழங்க மாட்டார், டி ஆர் பாலுவிடம் மன்னிப்பு கேட்க மாட்டார் என்றும் டி ஆர் பாலு குறித்து எந்த ஒரு அவதூறு கருத்துக்களையும் அண்ணாமலை தெரிவிக்கவில்லை என்றும் கூறினார். 
 
டி ஆர் பாலு குறித்த சொத்து மதிப்பு அண்ணாமலை வெளியிட்டது அனைத்தும் உண்மையே என்றும் இதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அண்ணாமலை அவற்றை வெளியிட்டார் ஒன்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
 
Edited by Mahendran