செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (13:21 IST)

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நாளை மகளிர் ஆணையம் இது குறித்து விசாரணையை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
 
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை செய்ய உள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றவாளி என்று அறிந்த போதும், முந்தைய வழக்குகளில் அவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறியது ஏன என  விசாரணை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
 
ஏற்கனவே தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து வருவது குறித்து கடுமையான கவலைகளை மகளிர் ஆணையம் குறிப்பிட்டு இருந்த நிலையில், குற்றங்களை செய்யும் துணிச்சலை அந்த நபருக்கு தமிழக அரசின் அலட்சியம் தான் என  கூறியுள்ளது.
 
ஏற்கனவே இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தற்போது மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran