செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2017 (13:33 IST)

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அலங்காநல்லூர்: ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் ஆட்சியர்!

ஜல்லிக்கட்டுக்கு தயாராகும் அலங்காநல்லூர்: ஏற்பாடுகளை தீவிரப்படுத்தும் ஆட்சியர்!

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என அலங்காநல்லூரில் வெடித்த போராட்டத் தீ இன்று தமிழகம் முழுவதும் பற்றி எரிகிறது. இதன் காரணமாக தற்போது அடிபணிந்துள்ளது தமிழக அரசு.


 
 
தொடர் போராட்டத்தால் செய்வதறியாமல் திகைத்த அரசு தற்போது அவசர சட்டம் கொண்டு வர முடிவெடுத்துள்ளது. இதற்கான சட்ட வாரைவு தயார் செய்யப்பட்டு குடியரசுத்தலைவர், பிரதமரின் ஒப்புதல் பெறப்பட்டு ஓரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என முதல்வர் இன்று அறிவித்தார்.
 
இதனையடுத்து ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகளை செய்ய அரசு தரப்பில் இருந்து உத்தரவு வந்ததாக தகவல்கள் வருகின்றன.
 
இதனையடுத்து அலங்காநல்லூரில் மதுரை மாவட்ட ஆட்சியர் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை பார்வையிட்டார்.  அரசின் உத்தரவின் பேரில் ஏற்பாடுகளை பார்வையிட்டதாக மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் தகவல் தெரிவித்தார்.