1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 14 டிசம்பர் 2022 (23:10 IST)

கட்டண உயர்வு, விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுக ஆர்பாட்டம்

karur
பொய்யான வாக்குறுதி கொடுத்து பதவிக்கு வந்தவர் தான் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும், நீட் தேர்வு ரத்து செய்வேன் என்று பொய் கூறியவர் தான் தற்போது அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் என்றும் அதிமுக நிர்வாகி கரூர் அருகே சுவாரஸ்ய பேச்சு. 
 
கரூர் மாவட்டத்திற்குட்பட்ட 17 ஊராட்சி ஒன்றிய அதிமுக சார்பில் சொத்துவரி, மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவைகளை கண்டித்து அதிமுக ஆர்பாட்டம் நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் மட்டும் 8 இடங்களில் மூன்றாவது கட்டமாக இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகளோடு பொதுமக்களும் கலந்து கொண்டு திமுக அரசிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கிழக்கு மற்றும் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய அதிமுக சார்பில் இலாலாபேட்டை காந்திசிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கரூர் மாவட்ட அதிமுக எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளரும், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவருமான தானேஷ் என்கின்ற முத்துக்குமார் பேசிய போது., இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தேர்தலின் போது நீட் தேர்வினை ரத்து செய்வேன் என்று கூறி பொய்வாக்குறுதி கொடுத்ததாகவும், அவரது கட்டுப்பாட்டில் தான் திரையுலகமே உள்ளதாகவும், அவரது தந்தை மு.க.ஸ்டாலின் தமிழக மக்களிடம் பொய் வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து வாக்குகளை வாங்கி ஜெயித்துள்ளார். ஏற்கனவே எய்ம்ஸ் மருத்துவமனை காணோம் என்று மக்களிடம் கூறி வாக்குகள் கேட்டவர் தான் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் என்றும் சுட்டிக்காட்டினார்.