செவ்வாய், 31 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 13 செப்டம்பர் 2023 (13:42 IST)

இந்தியா கூட்டணி உருவான பிறகு பாஜகவுக்கு நடுக்கம் வந்துவிட்டது- முதல்வர் மு.க.ஸ்டாலின்

வரும் 2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் வரவுள்ள  நிலையில், இதற்காக அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன.

அதன்படி, காங்கிரஸ், திமுக, திரிணாமுல், சமாஜ்வாடி உள்ளிட்ட இந்தியா முழுவதும் உள்ள பல கட்சிகள் இணைந்துள்ளன.

இக்கூட்டணியில் 16 கட்சிகள் இணைந்த நிலையில், சமீபத்தில் மும்பையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதேபோல் பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்துள்ளன.

இந்த நிலையில், ''இந்தியா கூட்டணி உருவான பிறகு பாஜகவுக்கு  நடுக்கம் வந்துவிட்டது'' என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், ''பாஜக ஆட்சியின்  நாட்கள் எண்ணப்படுகின்றன. இந்தியா கூட்டணியை அரியனணையில் அமர்த்த மக்கள் தயாராகிவிட்டனர்கள் என்பதை உணர்ந்த பாஜக ஆட்சியாளர்கள், இப்போது நாட்டின் பெயரை மாற்றத் துணிந்துவிட்டனர்'' என்று தெரிவித்துளார் .