1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (16:10 IST)

இணைந்தது அணிகள் ; யார் யாருக்கு என்னென்ன பதவி?

6 மாத கால மோதலுக்கு பின், ஓ.பி.எஸ் அணி இன்று எடப்பாடி அணியோடு இணைந்துள்ளது. 


 

 
அதிமுக தலைமை அலுவலகத்தில், ஓ.பி.எஸ்-ஸும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒருவருக்கொருவர் கை கொடுத்து கொண்டனர். இந்நிலையில் ஓ.பி.எஸ் அணியில் இருந்தவர்களுக்கு புதிய பதவிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எடப்பாடி அணியில் இருந்தவர்களுக்கு பதவியில் மாறுதலும் செய்யப்பட்டுள்ளது. 
 
மேலும், அதிமுகவை வழிநடத்த ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
 
ஓ. பன்னீர் செல்வம் - துணை முதலமைச்சர் மற்றும் நிதித்துறை மேலும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர்
 
மாஃபா பாண்டியராஜன் - தமிழ் வளர்ச்சி, தொல்லியல் துறை
 
உடுமலை ராதாகிருஷ்ணன் - கால்நடைத்துறை அமைச்சர்
 
பாலகிருஷ்ண ரெட்டி - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை
 
அதேபோல், சட்டத்துறை அமைச்சராக உள்ள சி.வி. சண்முகம் கூடுதலாக சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை பொறுப்பையும் கவனிப்பார்.
 
அதேபோல், எடப்பாடி பழனிச்சாமி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளராகவும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராக கே.பி.முனுசாமி மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோரும் நியமிக்கப்பட்டனர்.
 
புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்களுக்கு இன்று மாலை 4.30 மணியளவில் ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார் எனத் தெரிகிறது.