வியாழன், 16 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 2 மார்ச் 2017 (19:46 IST)

ரஜினியை திடீரென சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ.

நடிகர் ரஜினிகாந்துடன் அதிமுக எம்.எல்.ஏ. கருணாஸ் திடீரென சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அரசியில் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை என கூறினார்.


 

 
அதிமுக எம்.எல்.ஏ. மற்றும் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ் இன்று நடிகர் ரஜினிகாந்தை திடீரென சந்தித்து பேசியுள்ளார். நீண்ட நேரம் நடைப்பெற்ற சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய கருணாஸ் கூறியதாவது:-
 
இந்த சந்திப்பில் அரசியல் குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை. எனக்கு அவர் மீது மரியாதை உள்ளது. அவருக்கும் என்னை பிடிக்கும். அந்த வகையில்தான் இந்த சந்திப்பு நடந்தது. வேறு எந்த காரணமும் இல்லை. அவர் ரோபா படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார், என்றார்.
 
ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வரப்போவதாக, பாஜக கட்சியில் இணைய போவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. இந்நிலையில் கருணாஸின் இந்த சந்திப்பு அதிமுக சார்ப்பில் அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்கும் என பேசப்படுகிறது.