செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 28 மார்ச் 2021 (12:52 IST)

அத்துமீறி பேசிய ஆ.ராசா! ஆத்திரமடைந்த அதிமுகவினர்! – எடப்பாடியில் கருப்பு கொடி போராட்டம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஆ.ராசாவை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த திமுக எம்.பி ஆ.ராசா முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் திமுக தலைவர்களே ஆ.ராசா பேச்சுக்கு அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் முதல்வரை அவதூறாக பேசியதாக ஆ.ராசா மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆ.ராசாவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தொகுதியான எடப்பாடியில் அதிமுகவினர் கருப்புக்கொடி பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.