1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 18 அக்டோபர் 2015 (17:18 IST)

நடிகர் சங்க தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முடிந்தது : 5.30 மணிக்கு ஓட்டும் எண்ணும் பணி தொடங்குகிறது

நடந்து கொண்டிருக்கும் நடிகர் சங்க தேர்தலினன் ஓட்டும் எண்ணும் பணி  5.30 மணிக்கு தொடங்கும் என தேர்தல் அதிகாரி பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
 


 
நடிகர் சங்க தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கி பரபரப்பாக நடந்து முடிந்திருக்கிறது . இன்று மதியம் 4 மணி நிலவரப்படி தபால் ஓட்டுகளையும் சேர்த்து மொத்தம் 2597 ஓட்டுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் அதிகார் பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
 
மேலும் அவர் கூறியபோது, மொத்த ஓட்டு எண்ணிக்கை 3339 என்றும், இன்று மாலை 5.30 மணிக்கு ஓட்டு எண்ணும் பணி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.