ஆடி கார் ஐஸ்வர்யா மோதி பலியான தொழிலாளி மகள்-மகள் படிப்பு செலவு ஏற்ற விஷால்
சென்னை தரமணியில் பெண் பொறியாளர் ஐஸ்வர்யா குடிபோதையில் கார் மோதிய விபத்தில் பலியான தொழிலாளியின் மகன்-மகள் படிப்பு செலவை நடிகர் விஷால் ஏற்றுக் கொண்டார்.
சென்னை தரமணியில் கடந்த 1ம் தேதி மதுபோதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யா, தொழிலாளி ஒருவர் மீது ஏற்றி விபத்துக்கு உள்ளாக்கினார். இந்த விபத்தில் முனுசாமி [53] என்ற தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
முனுசாமியின் மகன் ஆனந்த் திருவான்மியூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில் 11ஆம் வகுப்பும், மகள் திவ்யா அதே பள்ளியில் 7ஆம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
இந்நிலையில், முனுசாமியின் மகன் ஆனந்த், மகள் திவ்யா ஆகிய இரண்டு பேரின் கல்விக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்வதாக விஷால் அறிவித்துள்ளார். பள்ளி முதல் கல்லூரி வரை அவர்கள் விரும்பி படிக்க ஆசைப்படும் படிப்பு செலவை விஷால், தேவி அறக்கட்டளை மூலம் செய்ய இருக்கிறார்.