1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 19 ஏப்ரல் 2018 (12:10 IST)

என் குடும்பத்தை சேர்க்காதீர்கள் - மோடியை கலாய்த்த கருணாகரன்

பிரதமர் மோடியின் அலுவலக டிவிட்டர் பக்கம் வெளியிட்டிருந்த ஒரு செய்திக்கு, நடிகர் கருணாகரன் கிண்டலாக கருத்து தெரிவித்துள்ளார்.

 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சமீபத்தில் மோடி சென்னை வந்த போது கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பலூன்களை பறக்கவிட்டும் அவருக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டது. 
 
அந்த நிலையில், பிரதமர் மோடி சமீபத்தில் இங்கிலாந்து சென்றார். அங்கு மக்கள் முன்பு உரையாற்றிய மோடி, எங்களிடம் மக்கள் அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் நினைத்தால் ஒரு டீ வியாபாரியையும் பிரதமர் ஆக்கிவிடுவார்கள். இந்தியாவில் உள்ள 125 கோடி மக்களும் எங்களும் குடும்பமே” என அவர் பேசினார். இந்த செய்தி மோடியின் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது.


 

 
இதைக்கண்ட நடிகர் கருணாகரன் “சார் என்னையும், என் குடும்பத்தையும் சேர்க்காதீர்கள். உங்கள் குடும்பத்திலிருந்து விலக்கி விடுங்கள்’ என பதில் டிவிட் செய்தார்.

இதைக்கண்ட ஒருவர் “ இந்தியாவின் ஜனத்தொகை ரு.132 கோடி. தமிழ்நாட்டு ஜனத்தொகை 6.8 கோடி.  எனவே, ஏற்கனவே நம்மை ஒதுக்கிவிட்டுத்தான் கூறியிருக்கிறார் என கிண்டலடித்துள்ளார்.

 
அதேபோல், இனிமேல் ஒரு ஊர்ல ஒரு ராஜான்னு கதை சொன்னா குழந்தைகளுக்கே புடிக்காது என ஹெச்.ராஜாவை கிண்டலடித்தும் கருணாகரன் ஒரு டிவிட் போட்டுள்ளார்.