Last Modified: திங்கள், 20 பிப்ரவரி 2017 (20:23 IST)
சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம். ஸ்டாலின் அதிரடி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சனிக்கிழமை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய நிலையில் அன்றைய தினம் சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடந்து கொண்டதால் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இன்று அவர் அண்ணா அறிவாலயத்தில் அளித்த பேட்டியில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றிருக்க முடியாது என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இல்லாத சூழலில் வாக்கெடுப்பு நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தது முற்றிலும் ஐனநாயக படுகொலை என்றும் கூறினார்.
சட்டப்பேரவையிலிருந்து ஒட்டுமொத்தமாக அனைவரையும் வெளியேற்றியது தவறு என்றும், காவல்துறையினரை உடை மாற்றி சட்டப்பேரவைக்கு உள்ளே வர அனுமதித்தது அதைவிட பெரிய தவறு என்றும் அவர் தெரிவித்தார்.
எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததால் வாக்கெடுப்பு சுதந்திரமாக நடைபெறவில்லை என்றும் கூவத்தூரிலிருந்து தப்பி வந்ததாக பேரவையில் செம்மலை அறிவித்ததையும் அவர் சுட்டி காட்டினார்.