திடீர் மெளனத்தை கலைத்த ஆதவ் அர்ஜூனா.. எம்ஜிஆர் பிறந்த நாள் பதிவு..!
கடந்த சில நாட்களுக்கு முன்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆதவ் அர்ஜுனா அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருந்தார். அவரது ஒவ்வொரு பதிவும் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் திடீரென சில நாட்கள் மௌனமாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு தனது மெளனத்தை கலைத்து விட்டு மீண்டும் களம் இறங்கி உள்ளார். அவர் எம்ஜிஆர் பிறந்த நாள் குறித்து செய்த பதிவு இதோ:
வறுமையும் ஏழ்மையும் சமூகத்திலிருந்து ஒழிய வாழ்நாள் முழுக்க போராடிய மகத்தான தலைவர்.
சத்துணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தி மேம்படுத்தியதன் மூலம் ஏழை மாணவர்களின் பசிப்பிணியைப் போக்கிய புகழுக்குரியவர்.
அரசுப் பள்ளியில் படித்த நான் அவரின் சத்துணவுத் திட்டத்தால் பயனடைந்த நெகிழ்ச்சியை இந்நேரத்தில் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன்.
அரசியல் பணம் ஈட்டுவதற்கல்ல, பாமரர்களின் நல்வாழ்வுக்கான திட்டங்களையும் நிர்வாகங்களையும் மேற்கொள்வதற்கானது என்று பாடம் புகட்டியவர்.
பேரறிஞர் அண்ணாவை தன் ஒரே தலைவராகப் பறைசாற்றி, அவர் இலட்சியப் பாதையில் பயணித்தவர்.
போற்றுதலுக்குரிய மக்கள் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் செயற்திட்டங்களையும், புகழையும் இன்றைய இளைஞர்கள் அறிய வேண்டும் என்று கூறி அவரது பிறந்தநாளை நினைவுகூருகிறேன்.
Edited by Siva