வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (16:25 IST)

கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த இளைஞர்.. ஒரு நிஜ ‘மஞ்சும்மெல் பாய்ஸ்’

சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மெல் பாய்ஸ் என்ற திரைப்படத்தில்  ஆழமான ஒரு பள்ளத்தில் விழுந்த இளைஞரை அவரது நண்பர்கள் காப்பாற்றுவது போன்ற கதையம்சம் இருக்கும் என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் காட்சியை போல் கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் இளைஞர் ஒருவர் விழுந்த நிலையில் அவரை மீட்க தீயணைப்பு துறையினர் போராடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் என்ற சுற்றுலா தளத்திற்கு சென்ற இளைஞர் ஒருவர் எதிர்பாராத வகையில் நூறடி பள்ளத்தில் விழுந்து விட்டதாகவும் இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அவரை மீட்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

100 அடி பள்ளத்தில் விழுந்த இளைஞர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் அவருடன் வந்தவர்கள் எப்படியாவது அவரை மீட்டுக் கொடுங்கள் என்று  கண்ணீருடன் கெஞ்சியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Edited by Siva