பிரேமலதா விஜயகாந்த் பெயரில் புதிதாக சமூக வலைதள பக்கங்கள்.. முக்கிய அறிவிப்பு..!
தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெயரில் புதிய சமூக வலைதள பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேமுதிக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தொலைக்காட்சி இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று அதாவது பிப்ரவரி 21ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம், இன்ஸ்டாகிராம் பக்கம், வாட்ஸ் அப் சேனல் போன்ற சமூக வலைதளங்களை தொடங்கி, கட்சியின் அறிவிப்புகள், மக்களுக்கான செய்திகள், தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகளை மேற்கண்ட நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்தடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே விஜயகாந்த் பெயரில் சமூக வலைதள பக்கங்கள் இயங்கி வரும் நிலையில் தற்போது பிரேமலதா பெயரிலும் புதிய சமூக வலைதள பக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by siva