வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (15:11 IST)

சவுக்கு சங்கரும் பெண் காவலர்களின் தொடர் புகாரும்!

குமரி மாவட்டம் களியக்காவிளை பெண் ஆய்வாளர் சுப்புலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில். மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். 
 
இந்த வழக்கில் குழித்துறை நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர் படுத்துவதற்காக, சென்னை புழல் மத்திய சிறையில் இருந்து இன்று (ஆகஸ்ட்_08) அதிகாலை 2.30 மணி அளவில் நாகர்கோவில் சிறைக்கு கொண்டு வரப்பட்டார்.
 
அவரை நாகர்கோவில் சிறையில் இருந்து மீண்டும் காலை10.30  மணியளவில் குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த காவல்துறை யினர் அழைத்துச் சென்றனர். 
 
சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பதிவு செய்தது சரியா.? தவறா? என நீதிபதி கேள்வி எழுப்பியுள்ள நிலையில். 
 
பெண் காவலர்களின் தொடர் புகாரால் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்ட நீதிமன்றத்திலும் சவுக்கு சங்கர் விசாரிக்கப்படுவது ஒரு தொடர் கதையாக உள்ளது.