புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 1 அக்டோபர் 2018 (10:19 IST)

மகள் வயது பெண்ணை விபச்சாரத்திற்கு அழைத்த 62 வயது முதியவர் கைது

தருமபுரியில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பெண்ணை முதியவர் ஒருவர் விபச்சாரத்திற்கு அழைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர்கள் பலர் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் தான் என மார்தட்டிக் கொண்டிக்க, அதே தமிழகத்தில் தான் பல பெண்கள் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகி சிக்கித் தவிக்கின்றனர்.
 
தருமபுரியை சேர்ந்த ஜோதி(37), என்ற பெண் வெளியூர் செல்வதற்காக தருமபுரி பஸ் ஸ்டாண்டிற்கு சென்றார். அங்கு அவர் பேருந்திற்காக காத்துக் கொண்டிருக்க, அங்கே வந்த ரவிக்குமார் (62) என்ற முதியவர்  ஜோதியை விபச்சாரத்திற்கு அழைத்துள்ளார்.
 
இதனால் அதிர்ந்துபோன ஜோதி, இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் ரவிக்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகள் வயது பெண்ணிடம் ஒரு முதியவர் இவ்வாறு கீழ்த்தரமாக நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.