தொண்டையில் புரோட்டா சிக்கியதில் வாலிபர் மரணம்!
தொண்டையில் புரோட்டா சிக்கியதில் வாலிபர் மரணம்!
கோவை அருகே அம்மன்குளம் அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்த ரஞ்சித் என்பவர் குடி போதையில் இருந்த போது புரோட்டாவை வேகமாக சாப்பிட்டதில் அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக இறந்துள்ளார்.
32 வயதான ரஞ்சித்துக்கு இன்னமும் திருமணம் ஆகவில்லை. இவரது தந்தை ஜெயபால் ஒரு தனியார் பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். தந்தைக்கு உதவியாக ரஞ்சித் அவருடன் காவல் பணிக்கு சில நேரங்களில் செல்வது வழக்கம்.
இந்நிலையில் நேற்று பள்ளிக்கு காவல் பணியில் தந்தையுடன் சேர்ந்து சென்றார் ரஞ்சித். இருவரும் இரவு சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பின்னர் வாங்கி வைத்திருந்த புரோட்டாவை சப்பிட்டுள்ளனர். முதலில் சாப்பிட்ட ரஞ்சித்தின் தந்தை ஜெயபால் தூங்க சென்று விட்டார்.
காலை எழுந்து பார்த்த பொழுது ரஞ்சித் அந்த இடத்திலேயா வாயில் புரோட்டாவுடன் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்து வருகின்றனர். குடி போதையில் இருந்த ரஞ்சித் வேகமாக புரோட்டாவை சாப்பிட்ட போது அது தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என கூறுகின்றனர். காவல்துறை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.