செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 மே 2021 (12:05 IST)

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்த வேண்டும்: சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்த வேண்டும் என பொது நல வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது 
 
சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவர் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவில் தமிழகத்தில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் இதுவரை மொத்தம் தமிழகத்தில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார் 
 
எனவே தமிழகத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முழுமைப்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்க வேண்டும் என்றும் தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் 
 
மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாகி உள்ளதால் அதிகளவில் மருத்துவர்கள் செவிலியர்கள் நியமனம் செய்ய வேண்டும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டு உள்ளார் இந்த மனுவை இன்னும் ஒரு சில நாட்களில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது