திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 19 மார்ச் 2022 (17:26 IST)

பேருந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு...

கர்நாடகாவில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில்  4 மாணவர்கள்   உட்பட                       8 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக  மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா – ஒசக்கோட்டை இடையே  தனியார் பேருந்து இயக்கி வருகிறது.

அதுவும்  காலை நேரங்களில்  மட்டுமே இயங்கப்படுகிறது. இந்தப் பேருந்தில்  சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் உட்பட  80 பயணிகளுடம் அப்பெருந்து சென்று கொண்டிருந்தது.   கூட்டம் அதிக மாக இருந்ததால், சுமார் 20 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்தின் மேல் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அப்போது, பாவகடா தாலூகா பளவள்ளி  என்ற பகுதியிலுள்ள ஏரி மீது சென்று கொண்டிருந்தபோது, ஓட்டு நரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்திற்குள்ளானது.

இதில், 4 மாணவர்கள் உட்பட 8 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும், 50 க்கும் மேற்பட்டோட் பலியானதாகக் கூறப்படுகிறது.  விபத்தில் காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.