திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 4 ஜூலை 2020 (08:14 IST)

8 மாவட்டங்களில் 100 ஐ கடந்த கொரோனா எண்ணிக்கை! அதிர்ச்சி அளிக்கும் புள்ளி விவரம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு விகிதம் உயர்ந்து கொண்டே சென்று கடந்த இரண்டு நாட்களாக தினமும் 4000 பேர் வரை பாதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. தலைநகர் சென்னையில் பாதிப்பு அதிகபட்சமாக உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் தற்போது மற்ற மாவட்டங்களிலும் எண்ணிக்கை உயர ஆரம்பித்துள்ளது.

நேற்றைய நிலவரப்படி சென்னை தவிர்த்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுரை, தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களிலும் புதிய பாதிப்பு எண்ணிக்கை 100 ஐ தாண்டியுள்ளது. இது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அமைச்சரோ தமிழகத்தில் இன்னும் சமூகப்பரவல் இல்லை என்று கூறிவருகிறார்.