திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (17:07 IST)

முதுமலை புலிகள் காப்பகத்தில் நாட்டின் 78 -வது சுதந்திர தினவிழா!

தெப்பக்காடு முகாம் வளாகத்தில் துணை இயக்குனர் (பொறுப்பு) வெங்கடேஷ் பிரபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
 
இதைத் தொடர்ந்து வனத்துறையினரின் கொடி அணிவகுப்பு மரியாதை நடைபெற்றது. அப்போது வளர்ப்பு யானைகள் தும்பிக்கைகளை உயர்த்தியபடி தேசிய கொடியை நோக்கி மரியாதை செலுத்தியது. 
 
மேலும் வளர்ப்பு யானைகள் மீது பாகன்கள் அமர்ந்திருந்தவாறு தேசியக் கொடியை உயர்த்தி பிடித்தனர். இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா பயணிகள், வனத்துறையினர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 
 
பின்னர் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.