1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 6 ஜூன் 2020 (10:36 IST)

எரிந்த சாம்பலான 7,000 கோழி குஞ்சிகள்: வேலூரில் கோரம்!

வேலூர் அருகே திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் கோழி பண்ணையில் இருந்த கோழி குஞ்சிகள் உயிரிழந்தன. 

 
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அடுத்த மாச்சனூர் கிராமத்தை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் சொந்தமான கோழி பண்ணையில் நேற்று இரவு 9 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 
 
உடனடியாக இது குறித்து போலீஸாருக்கும் தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கபட்டது. தகவலின் பெயரில் வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். 
 
இதில் சுமார் 5 லட்சம் மதிப்பிலான இதர பொருட்களும் சுமார் 7,000 கோழி குஞ்சிகளும் எரிந்து நாசமாகின.