புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 23 ஜூலை 2019 (14:28 IST)

55 வயது கள்ளக்காதலியை கொன்ற 30 வயது இளைஞன் ! பகீர் சம்பவம்

சத்தியமங்கலம் அடுத்த மூலக்கரையை சேர்ந்தவர் தேவி (55. இவது கணவர் சுரேஷ். இவர் லாரி கிளீனராக இருந்ததால் அடிக்கடிவெளியூர்களுக்குச் சென்று வருகிறார். இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த தேவி கழுத்தறுபட்டு ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தார்.
இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி கொலைக்காரணம் மற்றும், குற்றவாளியை வலை வீசித்த்தேடி வந்தனர்.
 
இந்நிலையில் போலீஸாரின் விசாரணையில் தேவி பிணமாகக் கிடந்த இடத்தில் மதுபாட்டில் இன்று இருந்துள்ளது. இதன்படி போலீஸார் இன்னும் தீவிரமாக விசாரித்தனர். 
 
அப்போது, ராமகிருஷ்ணன்(30) என்ற இளைஞருக்கும், தேவிக்கும் கள்ளதொடர்பு இருந்துள்ளது. கணவர் சுரேஷ் இல்லாத நேரத்தில் தேவியின் வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன் அவருடன் உல்லாசமாக இருந்துள்ளார்.,இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர்.
 
இந்நிலையில் சம்பவத்தன்று ராமகிருஷ்ணன் - தேவி இருவரும் மதுகுடித்துள்ளனர். பின்னர் தான் ஏற்கனவே கொடுத்திருந்த ரூ7500 பணத்தை ராமகிருஷ்ணன், தேவியிடம் கேட்டுள்ளார்.
 
அதைப் பிறகு பார்க்கலாம் என்று தேவி கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி சண்டை எழுந்ததாகத் தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், தேவியை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
 
பின்னர் தலைமறைவாக இருந்த ராமகிருஷ்ணனை  தனிப்படைபோலீஸார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபி சிறையில் அடைக்கப்பட்ட்டார். இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது.