வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 20 மே 2021 (18:33 IST)

கொரொனா தடுப்புப் பணிகளுக்காக 2100 மருத்துவப் பணியாளார்கள் நியமனம் !

கொரொனா தடுப்புப் பணிகளுக்காக தற்காலிகமாக 2100 மருத்துவப் பணியாளார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் கொரொனா இரண்டாம் கட்ட அலைபரவிவரும் நிலையில் இந்தியாவில் இது கோர தாண்டவம் ஆடிவருகிறது.  எனவே மத்திய் அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரம் மக்கள் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் கொரொனா பாதிக்கும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழகதிதில் கொரொனா தடுப்புப் பணிகளுக்கான தற்காலிகமாக் 2100 மருத்துவப் பணியாளார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் 6 மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் நியமித்து இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இவர்களுக்கான ஊதிய செலவினங்களுக்காக ரூ.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.