1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்
Written By Ilavarasan
Last Updated : புதன், 14 மே 2014 (15:02 IST)

பணம் வழங்க வசதியாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது - மு.க.ஸ்டாலின்

ஜனநாயக அடிப்படையில் மக்களவைத் தேர்தல் நடைபெறவில்லை என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு மாலை அணிவித்த பின் திருச்சியில் ஸ்டாலின் பேட்டியளித்தார், அப்போது பணநாயக அடிப்படையில் தான் மக்களவைத் தேர்தல் நடைபெற்றதாக குற்றம் சாட்டினார்.
 
மேலும் தமிழகத்தில் பணம் வழங்க வசதியாக 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது என புகார் கூறினார். கருத்துக் கணிப்புகளை திமுக தொண்டர்கள் ஏற்கமாட்டார்கள் எனவும் ஸ்டாலின் கருத்து தெரிவித்தார்.