புதன், 4 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மே 2022 (10:25 IST)

மே 2022 - 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
பருவநிலை மாற்றம் போல் சில காரியங்களில் வெற்றி சில காரியங்களில் தோல்வி என்று மாறி மாறி அனுபவிக்கும் ஆறாம் எண் அன்பர்களே இந்த மாதம் எதிர்பார்த்த வேலைகள் வேகமாக நடந்துமுடியும். இருந்த அலைச்சல்களும் குறையும். செலவு அதிகரிக்கும்  யாருக்கும் எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் திருப்திகரமான நிலை காணப்படும்.

குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பேசாமல் இருப்பது நன்மை தரும். பெண்களுக்கு வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் ஒருமுறைக்கு இருமுறை அலைந்தே செய்து முடிக்க வேண்டி வரும். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு கூடும். பாடங்கள் படிப்பதில் வேகம்  இருக்கும். 
 
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ர நாமம் படித்து பெருமாளை வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும்.