1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மே 2022 (10:16 IST)

மே 2022 - 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
அடுத்தவர் நலம் காப்பதே லட்சியம் என்பதை கருத்தில் கொண்டு மற்றவர்களுக்கு உதவிகள் செய்யும் ஒன்றாம் எண் வாசகர்களே நீங்கள் புதுமைகளை விரும்புகிறவர். இந்த மாதம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியங்களில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும். தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும்.

புதிய வாடிக்கையாளர் பிடிக்க கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  தங்களது பணிகளை  தாமதம் இல்லாமல் முடிக்க பாடுபடுவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். குழந்தைகளால் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

நினைத்ததை சாதிக்கும் மனவலிமை உண்டாகும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். பணவரத்து திருப்திதரும். வீண் கவலை ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பணிகளை தாமதம் இல்லாமல் முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
 
பரிகாரம்: வியாழக்கிழமையன்று சிவப்பு நிற வஸ்திரம் சாத்தி நவகிரகத்தில் சூரியனை வழிபட துன்பங்கள் நீங்கும்.