வியாழன், 5 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 மே 2022 (10:23 IST)

மே 2022 - 5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
சாமர்த்தியமாக திட்டமிட்டு எதிலும் ஈடுபடும் ஐந்தாம் எண் அன்பர்களே நீங்கள் சில நேரங்களில் ஏற்படும் திடீர் கோபத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசிப்பீர்கள். இந்த மாதம் உடல் ஆரோக்யம் பெறும். மனதில் தைரியமும், உற்சாகமும் கூடும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் பொறுப்புகள் அதிகரிக்கும்.

கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். பெண்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மனோதிடம் கூடும். உற்சாகமாக காணப்படுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.
 
பரிகாரம்: புதன்கிழமைகளில் பெருமாளுக்கு பாசிப்பயறு பாயாசத்தை நைவேதியம் செய்து வணங்க காரிய தடை நீங்கும்.