1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Abimukatheesh
Last Modified: புதன், 1 மார்ச் 2017 (18:40 IST)

மார்ச் மாத எண் ஜோதிடப் பலன்கள் - 7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சவாலான விஷயங்களையும் சாமர்த்தியமாக பேசி முடிப்பீர்கள்.


 


வி.ஐ.பிகள் உதவுவார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீட்டில் கூடுதலாக ஒரு அறை அல்லது தளம் கட்டுவீர்கள். பிள்ளைகளின் வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். யாருக்கும் ஜாமீன், கேரண்டர் கையெழுத்திட வேண்டாம்.

மறைமுக எதிரிகளை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அவ்வப்போது ஒருவித அச்சம், தயக்கம், தடுமாற்றம் வந்துச் செல்லும். உங்களுடன் பழகுபவர்களின் பலம் பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். நெருங்கிய நண்பராக இருந்தாலும் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

வழக்கில் வழக்கறிஞரை மாற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பூர்வீக சொத்துப் பங்கை போராடி பெறுவீர்கள். உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். மனைவியுடன் இருந்த மோதல்கள் விலகும். சகோதரிக்கு திருமணம் முடியும். ரியல் எஸ்டேட், கமிஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. 
 
அரசியல்வாதிகளே! வீண் பேச்சை தவிர்த்து தொகுதி நலனில் அக்கறை காட்டுங்கள். 

கன்னிப் பெண்களே! பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு பாசமழைப் பொழிவார்கள். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சமயங்களில் உங்களை கடிந்துப் பேசினாலும் அன்பாக நடந்து கொள்வார். 
 
கலைத்துறையினர்களே! பழைய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். தன்கையே தனக்குதவி என்பதை உணரும் மாதமிது.
 
அதிஷ்ட தேதிகள்: 7, 16, 25, 20, 15
அதிஷ்ட எண்கள்: 1, 7
அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மயில்நிலம்
அதிஷ்ட கிழமைகள்: திங்கள், புதன்