வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. எ‌ண் ஜோ‌திட‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:03 IST)

பிப்ரவரி 2021 - எண்ணியல் பலன்கள்: 5, 14, 23

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு...

 
எந்த காரியத்தையும் தீர ஆலோசித்து அதன்பின் முடிவெடுக்கும் ஐந்தாம் எண் அன்பர்களே இந்த மாதம் எல்லா காரியங்களும் முன்னேற்றமாக நடக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். புதிய தொடர்புகள் ஏற்படும். திறமை வெளிப்படும். பல வகையிலும் முன்னேற்றம் உண்டாகும். சொத்து தொடர்பான விஷயங்களில் இழுபறியான நிலை காணப்படும்.

தொழில், வியாபாரம் தொடர்பான காரியங்களில் தாமத போக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணம் செல்ல வேண்டி இருக்கும் குடும்பத்தில் தீடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியங்கள் முடிவுக்குவரும். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கை கூடி வரும்.

அரசியல்துறையினருக்கு எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்விக்கான செலவு உண்டாகும். திறமை வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அதன் மூலம் நன்மை ஏற்படும்.
 
பரிகாரம்: தினமும் திருப்பல்லாண்டு சொல்லி ரங்கநாதரை வழிபட்டு வருவதால் மனதில் துணிச்சல் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.