டிசம்பர் மாத ராசிப் பலன்கள் - மகரம்
யாருக்காகவும் தன் குறிக்கோளை மாற்றிக் கொள்ளாத நீங்கள் அழுத்தமான கொள்கை பிடிப்புள்ளவர்கள். 15-ந் தேதி வரை சூரியன் லாப வீட்டில் நிற்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள்.
சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ ப்ளான் அப்ரூவல் கிடைத்து வீடு கட்டத் தொடங்குவீர்கள். அரசால் அனுகூலம் உண்டாகும். அரசியலில் செல்வாக்குக் கூடும். பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதைக் கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு. புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரிந்துரை செய்யப்படும். ராஜ கிரகங்களான சனியும், குருவும் சாதகமாக இருப்பதால் ராஜதந்திரமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள்.
ஷேர் மூலம் பணம் வரும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். வேற்றுமதம், மொழி, இனத்தவர்களால் பயனடைவீர்கள். புது வீடு கட்டிக் குடிப்புகுவீர்கள். தடைப்பட்ட திருமணப் பேச்சு வார்த்தைக் கூடி கூரும். நீண்ட நாளாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தை ஒருவழியாக தந்து முடிப்பீர்கள். புதனும், சுக்ரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் பணப்புழக்கம் அதிகமாகும்.
குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை எடுத்து நடத்துவீர்கள். சர்ப்ப கிரகங்கள் சாதகமாக இல்லாததால் வீண் செலவுகள், பல் வலி, கண் எரிச்சல் வந்துப் போகும். நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே பேச்சில் நிதானம் அவசியம். மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். இடைத்தரகர்களை நம்பி பணம் கொடுத்து ஏமாறாதீர்கள்.
கன்னிப் பெண்களே! உங்களின் கனவுகள் நனவாகும். பள்ளிக் கல்லூரி கால தோழியை சந்திப்பீர்கள். பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். பற்று வரவு உயரும். பெயர் பலகையை நவீனமாக அமைப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். கலைத்துறையினரே! உங்களின் கற்பனைத் திறமைக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு பெறும் மாதமிது.